வாஷிங்டன்:இந்தியாவில் இருந்து உயர் கல்வி பயில்வதற்காகவும், வேலை தேடியும் பல மாணவர்கள் அமெரிக்க செல்கின்றனர். அப்படி செல்லும் இந்திய மாணவர்கள் இன ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாவதும், உடல்நல கோளாறு, விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் உள்ள க்ளீவ்லேண்ட் நகரில் இந்திய மாணவன் உமா சத்திய சாய் கன்டே இறந்துவிட்டதாகவும், அவரின் மரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும் நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய துணைத் தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உள்ள இந்திய மாணவர் உமா சத்ய சாய் காடே மறைவு துரதிர்ஷ்டவசமானது அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கள் என தெரிவித்துள்ளனர்
மேலும் மரணம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும், இந்தியாவில் உள்ள குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. அதே போல் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அணைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக தூதகாரம் தெரிவித்துள்ளது.