தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எனக்கும் குடும்பம் இருக்கு, என் குடும்பத்தில் 140 கோடி பேர்; குவைத்தில் பிரதமர் பேச்சு! - PM MODI KUWAIT VISIT

குவைத் தொழிலாளர் முகாமில் பேசிய பிரதமர் மோடி, நீங்கள் 11 மணி நேரம் உழைத்தால் நான் 12 மணி நேரம் வரை உழைக்க விரும்புகிறேன்'' என கூறினார்.

இந்திய தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி
இந்திய தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி (credit - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2024, 3:41 PM IST

Updated : Dec 22, 2024, 4:05 PM IST

குவைத் சிட்டி: 'நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்திற்காக கடினமாக உழைக்கிறீர்கள்.. நானும் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன், என் குடும்பத்தில் 140 கோடி பேர் உள்ளனர், எனவே நான் இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும்' என்று இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி குவைத் சென்றுள்ளார். அந்நாட்டிற்கு வருகை தந்த மோடியை விமான நிலையத்தில், குவைத் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப் சவுத் அல்-சபா, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மற்றும் பல உயரதிகாரிகள் உற்சாகமுடன் வரவேற்றனர்.

பின்னர் ஷேக் சாத் அல் அப்துல்லா இன்டோர் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடந்த 'ஹலா மோடி' நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமருக்கு குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு பிரதமர் உரையாற்றினார்.

தொடர்ந்து பிரதமர் இன்று குவைத்தில் உள்ள வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்குச் சென்றார். அங்கு உரையாற்றியவர், '' இந்தியாவை 2047க்குள் வளர்ந்த நாடாக மாற்றும் அரசின் தொலைநோக்குப் பார்வை திட்டமான "விக்சித் பாரத் 2047" திட்ட வளர்ச்சிக்கு இந்திய தொழிலாளர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க:புற்றுநோய்க்கான மரபணு சிகிச்சை மீதான ஜிஎஸ்டி வரி முழுமையாக ரத்து-தமிழக அரசு வரவேற்பு

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, '' இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடினமாக உழைக்கிறார்கள். வேலைக்காக இங்கு வந்துள்ள எனது நாட்டின் தொழிலாளர் சகோதரர்கள், அவர்களுடைய சொந்த கிராமத்தில் எவ்வாறு ஒரு சர்வதேச விமானநிலையத்தை உருவாக்குவது என்று நினைக்கிறார்கள். இந்த சிந்தனை தான் நமது நாட்டின் பலம்ஆகும்.

அவர்களது அர்ப்பணிப்பைப் பார்க்கும்போது என்னையும் கடினமாக உழைக்க தூண்டுகிறது. நீங்கள் 10 மணி நேரம் உழைத்தால் நான் 11 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று உணர்கிறேன். 11 மணி நேரம் உழைத்தால் நான் 12 மணி நேரம் வரை உழைக்க விரும்புகிறேன்.

உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் கடினமாக உழைக்கிறீர்களா இல்லையா? நானும் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன். என் குடும்பத்தில் 140 கோடி பேர் உள்ளனர், எனவே நான் இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டும். இந்தியா உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தகவல்தொடர்புகளை எளிதாக்குகிறது. இந்தியாவில் இன்டர்நெட் மலிவாக கிடைக்கிறது. குறைந்த செலவில் அனைவரும் நீங்கள் உங்களது குடும்பங்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு பேசலாம். வீடியோ கான்பரன்ஸ் செய்தால் கூட, செலவு மிகவும் குறைவு'' என்றார்.

பிரதமரின் இந்த குவைத் பயணமானது, 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத்துக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Dec 22, 2024, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details