சென்னை:அல்சைமர் (Alzheimer) என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு வகை மறதி நோயாகும். பல கோடிக்கணக்கான நரம்பு செல்களால் (neurons) ஆன மனித மூளை, ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கிறது. இந்த தொடர்பில் ஒரு நரம்பு துண்டிக்கப்பட்டாலும், மனிதனின் செயல்கள் இல்லாமல் போகும். அதாவது மறந்து போகும். அதுதான் அல்சைமர். முதிர்ச்சி அடையும்போது பாதிப்பு அதிகமாகும்.
அல்சைமர் நினைவுகளை மட்டுமல்ல குளிப்பது, பல் துலக்குவது போன்ற நமது அன்றாட செயல்பாடுகளை கூட மறக்கவைக்கக்கூடியது. இந்த நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் 55 மில்லியன் மக்கள் அல்சைமர் போன்ற மறதி நோய்களால் பாதிக்கப்படுவதாக அல்சைமர் சங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்சைமர் நோய் தொடர்பான கோப்பு படம் (Credits - Getty Images) பெண்களுக்கு அதிக பாதிப்பு: ஆண்களை விட பெண்கள் தான் அல்சைமர் நோயால் அதிகமாக பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆண்களை விட பெண்கள் நீண்ட காலம் வாழ்வதாலும், ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் இருப்பதாலும் அல்சைமரால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 ஆம் தேதி உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அல்சைமர் நோய் தொடர்பான கோப்பு படம் (Credits - Getty Images) அல்சைமர் நோயின் அறிகுறிகள்:ஒரு பொருளை எங்கு வைத்தோம் என்று மறப்பது. எளிதில் மறந்து போவது, தேதி, கிழமை, நண்பரின் பெயர் ஆகியவற்றை மறந்து போவது, வழக்கமான பணிகளை செய்வதில் சிக்கல், திட்டமிடுதல் அல்லது சிக்கல்களை தீர்ப்பதில் சிரமப்படுதல் ஆகியவை அல்சைமரின் அறிகுறிகளாகும்.
இந்திய ஆயுர்வேத மூலிகைகள் மூலம் அல்சைமர் நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை மூலம் தெரிய வந்துள்ளது.
அல்சைமர் நோய்க்கான ஆயுர்வேத மருத்துவ தாவரங்கள்:
அஸ்வகந்தா (Credits - Getty Images) அஸ்வகந்தா (Ashwagandha):குளிர்கால செர்ரி என்றழைக்கப்படும் அஸ்வகந்தா ஒரு பிரபலமான ஆயுர்வேத தாவரமாகும். இவ்வாய்வில் பங்கேற்பாளர்களின் நினைவாற்றலை அஸ்வகந்தா அதிகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான சிகிச்சைக்கு பின்னர் நியூரான்களின் ஆக்சான்கள் மற்றும் டெண்டிரைட்டுகள் மீளுருவாக்கம் செய்யப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டது. அல்சைமர் நோயியலை மாற்றி அமைக்கிறது. கல்லீரலில் குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டீன் ஏற்பி தொடர்பான புரதத்தை மேம்படுத்துகிறது.
நீர் பிரமி (Credits - Getty Images) நீர் பிரமி (Brahmi):நீர் பிரமி என்ற மூலிகை பழங்காலத்தில் இருந்தே நரம்பியல் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீர் பிரமி நரம்பிழைகளுக்கு பாதுகாப்பளித்து நினைவாற்றலை அதிகரிக்கும். அமலாய்ட் திட்டுக்கள் மூளையில் படிவதை தடுத்து அல்சைமர் நோயின் தாக்கத்தை தள்ளிப்போடுவதற்கு இந்த மூலிகை உதவவதாக ஆய்வு கூறுகிறது.
வல்லாரை (Credits - Getty Images) வல்லாரை (Centella asiatica):நரம்பியல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த வல்லாரை என்ற ஆயுர்வேத மூலிகை பயன்படுத்தப்பட்டு வருகிறது. வல்லாரையின் சாற்றில் உள்ள சேர்மங்கள் மூளைக்குள் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்துவதற்கு பயன்படுவதாக ஆய்வில் கண்டறிபட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்