தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

இந்த 5 பழங்கள் போதும்.. டெங்கு பாதிப்பின்போது ரத்த பிளேட்லெட்கள் எண்ணிக்கையை சுலபமாக அதிகரிக்கலாம்! - Blood Platelet increase fruits - BLOOD PLATELET INCREASE FRUITS

Fruits To Increase Platelet Count: டெங்கு போன்ற நோய்த்தொற்றில் இருந்து குணமாக இயற்கை முறையில் பிளேட்லெட்டுகள் அளவை அதிகரிக்க "ஃபிரான்டியர்ஸ் இன் பீடியாட்ரிக்ஸ்" ஆராய்ச்சி இதழ் கூறும் 5 பழங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

பழங்கள் (கோப்புப்படம்)
பழங்கள் (கோப்புப்படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 10:33 PM IST

சென்னை: மழைக்காலம் வந்துவிட்டால், பல வகையான பருவ நோய்களும் உடன் வரும் நிலையும் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக டெங்கு, டைபாய்டு, நிமோனியா, மலேரியா, வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களின் பாதிப்பு அதிவேகமாக நம்மை தொற்றிக் கொள்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கது, டெங்கு.

இந்த டெங்கு காய்ச்சல் தொற்று பற்றி மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு அச்சம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு காரணம், இந்த நோய் பாதிப்பால் உடலில் ஓடும் ரத்தத்தின் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்து, எளிதில் குணமடையும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பாதால் தான். இதேபோல் மலேரியா, டைபாய்டு தொற்றுகளிலும் இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அதிகரிக்கும் சூழல் இருக்கிறது.

பிளேட்லெட்டுகள் என்றால் என்ன?இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் சில நேரங்களில் உயிரிழப்பு நேரிடும் அபாயமும் உள்ளது. இந்நேரத்தில் முக்கியமாக ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இந்த பிளேட்லெட்டுகள் இரத்தத் தட்டு என்றும் த்ரம்போசைட் என்று அழைக்கப்படுகிறது. நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்கள் (Red blood cell) வெள்ளை ரத்த அணுக்கள் (white blood cells) இருப்பது போல் இந்த பிளேட்லெட்டுகளும் இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், இவைதான் ரத்தம் உறைதலில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ரத்த பிளேட்லெட்டுகள் எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகி, ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. எனவே, இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ரத்த ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்குறது. எனவே, இவ்வாறான ரத்த ஓட்டத்தை சீர் செய்யவும், பிளேட்லெட்டுகளின் எண்ணிகையை இயற்கையாக பழங்கள் தின்பது மூலம் அதிகரிக்கும் வழியை இந்த கட்டுரையில் காணலாம். இதில் முக்கிய கனியாக இருக்கும் 5 பழங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பப்பாளி:பப்பாளி பழம் பொதுவாக பலராலும் விரும்பி சாப்பிடப்படும் பழமாகும். இந்த பழம் சருமத்திற்கு இயற்கை பொழிவையும், உடலுக்கு இரும்புச் சத்தையும் அதிகமாக தரக்கூடியது. அதன் இலைகளும் பல ஆரோக்கிய பயன்களை தரக்கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த இலைகள் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொண்டவை. அதனால் பப்பாளி பழத்துடன் சேர்த்து அதன் இலையையும் சாப்பிட்டால் நல்லது என பல பாட்டி மருத்துவ முறையில் கேள்விப்பட்டிருப்போம். எனவே, டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பின் போது தினமும் ஒரு சில துண்டுகள் பச்சை பப்பாளியை சாப்பிடலாம் அல்லது வெறும் வயிற்றில் இலைகளின் சாறு எடுத்து குடிப்பது மூலம் ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த பப்பாளியின் நற்பலன் குறித்து 2019ஆம் ஆண்டில் வெளியான "ஃபிரான்டியர்ஸ் இன் பீடியாட்ரிக்ஸ்" ஆராய்ச்சி இதழின் ஆய்வுப்படி, டெங்கு காய்ச்சலால் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிளேட்லெட் எண்ணிக்கை பப்பாளி இலைச்சாறு குடித்து வந்ததால் கணிசமாக அதிகரித்ததுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் டேவிட் டான் கூறியுள்ளார்.

மாதுளை:இந்த பழங்களால் இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு அல்லது ஆண்டிபிலாஜிஸ்டிக் ஆகிய பண்புகள் நிறைந்துள்ளன. இதனால் இவற்றை திண்ணும் போது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்கள். அதனால் தினமும் ஒரு டம்ளர் மாதுளை சாற்றை சில வாரங்களுக்கு குடித்து வந்தால் பிளேட்லெட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கிவி: கிவி பழத்தில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் சி, கே, இ ஆகியவை அதிகம் உள்ளது. எனவே ரத்தசோகை, வைட்டமின் பி குறைபாடு, வைரஸ் தொற்று உள்ளவர்கள், தினமும் இரண்டு கிவி பழங்களை சாப்பிட்டு வந்தால் அதிகளவிலான பிளேட்லெட் சுரக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது ​​இப்பழத்தை சாப்பிடுவதால் பிளேட்லெட் எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்கலாம் எனவும் ஆய்வு கூறுகிறது.

டிராகன் ஃப்ரூட்:இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பைட்டோ நியூட்ரியண்ட்ஸ், லைகோபீன், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே, டெங்குவின் தீவிரத்தைக் குறைக்க டிராகன் பழம் பெரிதும் உதவியாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, சிவப்பு டிராகன் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரை உட்கொள்வதால் ஹீமோகுளோபின் மற்றும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது எலிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

கொய்யாப்பழம்: அனைவருக்கும் கிடைக்கும் பழங்களில் ஒன்று கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து என பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும் உதவுகின்றன. எனவே, டெங்கு பாதிப்பு இருக்கும் போது கொய்யா பழம் சாப்பிடுவது மூலம் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:நிபா வைரஸ் மூளையை பாதிக்குமா? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details