சென்னை: குழந்தை பருவத்தில் ஒருவர் உடல் எடை அதிகமாக இருந்தால் அவரது ஆயுட்காலம் குறைவாக இருப்பதாக ஐரோப்பிய காங்கிரஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது. ஆங்கிலத்தில் BMI என அழைக்கப்படும் உடல் நிறை குறியீட்டு எண்-னானது நான்கு வயது குழந்தைக்கு 3.5 BMI க்கு மேல் இருந்தால், அவர் 39 வயது வரை மட்டுமே உயிர் வாழ வாய்ப்புள்ளதாக இத்தாலி மற்றும் வெனிஸில் ஐரோப்பிய காங்கிரஸ் சார்பில் உடல் பருமன் குறித்து முதன்முறையாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் சுமார் 2.7 மில்லியன் பேர் 2 முதல் 29 வயதுக்குட்பட்டவர் ஆக இருந்துள்ளனர் . உடல் பருமனின் ’ஆழமான விளைவுகளை’ கண்டறியும் முயற்சியில் இறங்கிய ஆய்வாளர்கள், மனிதனின் வயது மற்றும் அவரின் குழந்தைப் பருவ எடையை ஒப்பிட்டு அவர்கள் வாழப்போகும் ஆயுட்காலத்தை அளவிட்டுள்ளனர்.