கேம்பிரிட்ஜ்: கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனாவுக்கு ஏற்ப பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அதிகளவில் சந்தைகளில் இருப்பதால் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளதால், இனி தடுப்பூசி தயாரிக்கவோ அல்லது விற்கப்படவோ மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் 5 ஆம் தேதி வழங்கப்பட்டு, இன்று நடைமுறைக்கு வந்தது.
முன்னதாக, கோவிஷீல்டு வழக்கு தொடர்பாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் மிக அரிய வகையாக டிடிஎஸ் எனப்படும் ரத்த உறைதல் மற்றும், ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தது.