சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (The Greatest of All Time) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, வைபவ், மோகன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் கேரளாவிற்குச் சென்ற விஜய்க்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சித்தார்த்த நுனி ஒளிப்பதிவாக பணியாற்றி வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி விஜய்யின் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.