தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வேட்டையனுடன் கங்குவா, விடாமுயற்சி மோதலா? சரியாக இருக்காது.. வெளிவந்த சீக்ரெட்! - vettaiyan release - VETTAIYAN RELEASE

Diwali Release: தமிழ் சினிமாவில் தீபாவளி பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் வேட்டையன் படத்துடன், விடாமுயற்சி, கங்குவா படம் நேரடியாக மோதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்று பட போஸ்டர்கள்
மூன்று பட போஸ்டர்கள் (Credits - Lyca Production and Suriya X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 5:39 PM IST

ஹைதராபாத்:தமிழ் சினிமவில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்கள் சற்று தடுமாறிய நிலையில், வருடத்தின் இரண்டாம் பாதியான அடுத்த 6 மாதங்கள் படு ஜோராக உள்ளன. பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்துக் கிடக்கின்றன. முன்னதாக, முதல் ஆறு மாதங்களில் அரண்மனை 4, கருடன், மகாராஜா படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வெற்றியைப் பெற்றது. மேலும், நாளை நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் ஆகிறது. பின்னர் ராயன், வணங்கான், தங்கலான், தி கோட், கங்குவா, வேட்டையன், விடாமுயற்சி என அடுத்தடுத்து ரிலீஸ்க்கு உள்ளன.

ரஜினியுடன் மோதலா?

வேட்டையன்: இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்படமானது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேதி குறிப்பிடவில்லை.

விடாமுயற்சி: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் விடாமுயற்சி. இதில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வருவதால், இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டிருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், அஜித் குமார் நடிக்கும் மற்றொரு படமான குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குவா: இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி - பிரமோத் தயாரிக்கின்றனர். இதில், பாபி தியோல், திஷா படானி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படமும் ஆயுத பூஜையையொட்டி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் ரஜினியுடன், அஜித், சூர்யா மோதலா என்ற ஹாட் டாப்பிக் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த மூன்று படங்களுமே அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் தங்களுக்குள்ளே சண்டை போட்டு குழப்பத்தில் உள்ளனர்.

முற்றுப்புள்ளி வைத்த கங்குவா தயாரிப்பாளார்: இந்நிலையில் தான் இதற்கு கங்குவா பட தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”கங்குவா படம் ஆயுத பூஜையை ஒட்டி திரைக்கு வர இருக்கிறது. ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதால் அந்நாளில் நாங்கள் வெளியிட விரும்பவில்லை. எங்கள் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்தாலும், ரஜினியுடன் மோதுவது சரியாக இருக்காது. அதனால் தான் ஆயுத பூஜைக்கு வெளியிடுகிறோம்” என்றார்.

அதேநேரம், விடாமுயற்சியும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால், எந்த படங்கள் திட்டமிட்டப்படி திரைக்கு வரும்? அல்லது வசூலை கருத்தில் கொண்டு கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொள்வார்களா? என பொருத்திருந்துப் பார்க்கலாம்.

இதையும் படிங்க:'இந்தியன் 2' சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி! - Indian 2 special Show

ABOUT THE AUTHOR

...view details