சென்னை:கவின் நடிப்பில் உருவான கிஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
வெளியானது நடிகர் கவின் நடித்த “கிஸ்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! - KISS FIRST LOOK POSTER
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும், கவின் நடிப்பில் உருவான “கிஸ்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியானது.

Published : Feb 11, 2025, 6:52 PM IST
காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும், ஃபர்ஸ்ட்லுக், பார்ப்பவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்திருப்பது, மேலும் படத்தின் ஆவலைத் தூண்டுகிறது.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்துள்ளார்.
டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து, நடிகராகவும் வலம் வரும் சதீஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய இளைய தலைமுறை காதலைக் கொண்டாடும் விதத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, “அயோத்தி” படப்புகழ் ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொண்டுள்ளார். எடிட்டராக RC பிரனவ் பணியாற்ற, மோகன மகேந்திரன் கலை இயக்கம் செய்துள்ளார். சண்டைப்பயிற்சி - பீட்டர் ஹெயின்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.