சென்னை: தமிழ்த் திரை உலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னை அடையாறு, காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திலேயே இரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார். உமா ரமணனின் இறுதிச் சடங்குகள் நாளை (மே 2) மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிழல்கள் திரைப்படத்தில் ‘பூங்கதவே தாழ்திறவாய்’ என்ற பாடல் மூலம் திரையுலகில் பிரபலமானவர் உமா ரமணன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நிழல்கள், வைதேகி காத்திருந்தாள், பன்னீர் புஷ்பங்கள், திருப்பாச்சி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.
எம்எஸ்வி, இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் இசையில் பல வெற்றிப் பாடல்கள் பாடியுள்ள அவர், இளையராஜா இசையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக,
- அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ..
- ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் பொன்மானே கோவம் ஏனோ..
- கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலைப் பார்த்தே இருந்தேன்..
- பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் ஆனந்த ராகம்..
உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சல்மான்கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு வழக்கு: போலீஸ் காவலில் இருந்த ஆயுத சப்ளையர் தற்கொலை! - Salman Khan Case Accused Suicide