சென்னை: பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் (GOAT) படத்திற்கு இசையமைத்துள்ளார். புதிய கீதை படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் விசில் போடு (whistle podu) என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். விசில் போடு பாடல் யூடியூப்பில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. விசில் போடு பாடல் வரவேற்பைப் பெற்றாலும், ஒரு தரப்பினர் மத்தியில் இப்பாடல் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
கோட் பட பாடலால் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினாரா யுவன் ஷங்கர் ராஜா குறிப்பாக அனிருத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இப்பாடலை விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் யுவன் சங்கர் ராஜாவை டேக் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் கவலையடைந்த யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்பட்டது. ரசிகர்களின் இந்த செயலால் யுவன் ஷங்கர் ராஜா இந்த முடிவு எடுத்துள்ளார் எனவும் யுவன் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். இது மட்டுமின்றி விசில் போடு பாடல் விஜய் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பாடலாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
யுவனிடம் இருந்து இதுபோன்ற பாடலை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் அக்கறைக்கு நன்றி, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சரி செய்ய முயற்சி செய்து வருகிறேன்” என பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க:"சேவையே கடவுள்".. மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்! - Raghava Lawrence