சென்னை:பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள செய்தியை அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் இன்று (பிப்.29) அறிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டில் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜோடிகளின் பட்டியலில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இடம்பெற்றுள்ள செய்தி அவர்களது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2007ஆம் ஆண்டு ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமான தீபிகா படுகோன், தற்போது முக்கிய முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ரன்வீர் சிங் உடன் இவர் இணைந்து நடித்து 2013ஆம் ஆண்டு வெளியான ராம் லீலா படம், பெரும் வெற்றியைக் கண்டது. இதையடுத்து ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், திருமணமாகி தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின், இருவரும் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாக தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.