தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கேப்டனுக்காக அளித்த வாக்குறுதியை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்.. படைத்தலைவன் பட இயக்குநர் நெகிழ்ச்சி! - raghava lawrence shanmuga pandian - RAGHAVA LAWRENCE SHANMUGA PANDIAN

Raghava Lawrence in Padai Thalaivan movie: விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ள ராகவா லாரன்ஸ் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என படத்தின் இயக்குநர் அன்பு கூறியுள்ளார்.

கேப்டனுக்காக அளித்த வாக்குறுதியை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்
கேப்டனுக்காக அளித்த வாக்குறுதியை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 6:11 PM IST

சென்னை: விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் படத்தின் இயக்குநர் அன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ பார்த்து இயக்குநராகிய நான், அவரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸிடம் கூறினேன். ஆனால், அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல, தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார்.

இதைக் கேட்டதும் இயக்குநராக எனக்கு மிகுந்த சந்தோஷம். கேப்டன் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும், எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் ஒத்துக் கொண்டது, அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. மேலும் தயாரிப்பாளர், ராகவா லாரன்ஸ் சம்பளம் பற்றி பேசிய போது, எந்த சம்பளமும் எனக்கு வேண்டாம்.

நான்கு ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். ராகவா லாரன்ஸின் இந்த அணுகுமுறை, படைத்தலைவன் படத்திற்கு மேலும் வலுசேர்த்தது போல இருந்தது. இந்த மகிழ்வான செய்தியை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துவதில், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி! - PRABHU DEVA AR RAHMAN MOVIE

ABOUT THE AUTHOR

...view details