ஐதராபாத் :நடிகர் சூர்யா நடிப்பில் சரித்தர படமாக கங்குவா திரைப்படம் தயாராகி வருகிறது. விரைவில் வெள்ளித் திரையில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள தற்போது போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் கங்குவா படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. பெரிய ஆவலுடன் காத்திருந்த சூர்யா ரசிகர்கள் கங்குவா டீசரை கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில், விரைவில் கங்குவா படத்தின் முதல் டீசர் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் தீயாக பரவியது.
இந்நிலையில், கங்குவா படக்குழுவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அதை திட்டவட்டமாக மறுத்து உள்ளார். மேலும், கங்குவா படம் குறித்த உண்மைக்கு புறம்பான வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக கங்குவா முதல் சிங்கிள் வெளியாவது குறித்த எக்ஸ் பதிவை மேற்கொள்காட்டி தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்ட பதிவில், தயவு செய்து உங்களது செய்திகளை பரப்ப வேண்டாம். முதல் சிங்கிள் தொடர்பாக வெளியான பதிவு உண்மை இல்லை. @KanguvaTheMovie என்ற எக்ஸ் பக்கத்தை பின் தொடர்ந்து அடுத்தடுத்த படம் குறித்து அப்டேட்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.
இதன் மூலம் கங்குவா அப்டேட் வெளியாவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிகிறது. ஏப்ரல் மாதம் பிறந்து உள்ள நிலையில் மாதந்தோறும் படக்குழு தரப்பில் ஏதாவது அப்டேட் வெளியாகும் என்பதால் முதல் சிங்கிள் குறித்த பதிவு வைரலானதாக கூறப்படுகிறது. இருப்பினும், கங்குவா படத்தின் முதல் சிங்கிளை எதிர்நோக்கி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஏறத்தாழ 300 கோடி ரூபாய் பட்ஜெட்டி தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தில் பாபி தியோல், திஷா படானி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கங்குவா படத்திற்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
இதையும் படிங்க :நடிகர் விஸ்வேஸ்வர ராவ் காலமானார்! - Actor Visveswara Rao Passed Away