சென்னை:மத்திய அரசு கடந்த 1954ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி வருகிறது. கடந்த வருடம் கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த நல்லாண்டி, இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற "மாயவா தூயவா" பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல் ஆகியோர் விருது பெற்றனர்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) 2022 ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்பமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதை பெறுகிறார்.
திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடன இயக்குநர் விருதை ஜானி மற்றும் சதிஷ், மற்றும் சிறந்த நடிகை விருதை திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடிகை நித்யா மேனன் பெறுகிறார்.