தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி... பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் என்ன? - PA RANJITH ATTAKATHI DINESH

Pa Ranjith attakathi dinesh: இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பா.ரஞ்சித், அட்டகத்தி தினேஷ் புகைப்படம்
பா.ரஞ்சித், அட்டகத்தி தினேஷ் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu, Prince Pictures productions)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 29, 2024, 11:13 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை தனது படங்களில் பா.ரஞ்சித் தொடர்ந்து காட்டி வருகிறார். மெட்ராஸ் படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கே ஆச்சர்யம் ஏற்படுத்தும் வகையில் பா.ரஞ்சித் மூன்றாவது படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கினார்.

’கபாலி’ படத்தில் ரஜினிகாந்தை ஸ்டைலிஷாக காட்சிபடுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் பேசியிருந்தார். இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ’காலா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்னர் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் ’சார்பட்டா’ பரம்பரை படத்தை இயக்கினார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தில் ஆர்யாவுடைய கபிலன், டான்ஸிங் ரோஸ் ஆகிய கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. இதனைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. பின்னர் பா.ரஞ்சித் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரை வைத்து ’தங்கலான்’ திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனையடுத்து பா.ரஞ்சித் சர்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அது மட்டுமின்றி நடிகர் சூர்யாவை வைத்து தனது கனவு கதையை இயக்கப் போகிறார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ரஞ்சித், அடுத்ததாக ’வேட்டுவம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் அட்டகத்தி தினேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ”நீங்கள் கிள்ளியும் பார்க்கலாம், எரித்தும் பார்க்கலாம்”... பிளாஸ்டிக் சர்ஜரி விமர்சனத்திற்கு நயன்தாரா பதிலடி!

பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அந்த படத்தின் கதாபாத்திரத்தை அடுத்து அட்டகத்தி தினேஷ் என அழைக்கப்பட்டு வருகிறார். கடைசியாக அட்டகத்தி தினேஷ் நடித்த ’லப்பர் பந்து’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பா.ரஞ்சித்துடன் இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details