தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’விடாமுயற்சி’ ரிலீஸ்: தேனியில் பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்திய அஜித் ரசிகர்கள்! - VIDAAMUYARCHI RELEASE

Vidaamuyarchi release: நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியான நிலையில், தேனியின் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்கள் மட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தேனியில் பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்திய அஜித் ரசிகர்கள்
தேனியில் பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்திய அஜித் ரசிகர்கள் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 6, 2025, 11:14 AM IST

தேனி: லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இன்று (பிப்.6) தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம், அசர்பைஜான் நாட்டில் அதிகப்படியான காட்சிகள் படமாக்கப்பட்டது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ’துணிவு’. அதற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கி காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிக்கலால் ரிலீஸ் தள்ளிப் போனது. முதலில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீடு எனக் கூறபப்ட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி சமீபத்தில் பங்கேற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் அஜித்குமார், தன்னிடம் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என கவலைப்பட வேண்டாம் என்றும், விடாமுயற்சி வெளியாகும் அன்று தான் பண்டிகை என்றும் உத்வேகம் அளித்ததாக கூறியுள்ளார்.

தேனியில் விடாமுயற்சி ரிலீஸை கொண்டாடிய ரசிகர்கள் வீடியோ (Credits - ETV Bharat Tamilnadu)

மேலும் விடாமுயற்சி படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என அஜித்குமார் பெரும் நம்பிக்கையுடன் இருப்பதாக மகிழ் திருமேனி கூறினார். இதனிடையே படம் வார நாட்களில் வெளியான போதும் அதிக அளவில் டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் விடாமுயற்சி படத்தின் டிக்கெட்டிற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்கவும் நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சியாக படம் வெளியாகி உள்ள நிலையில், தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, நடிகர் அஜித்தின் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: ’விடாமுயற்சி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த த்ரிஷா, அனிருத் - VIDAAMUYARCHI FIRST DAY CELEBRATION

இதனையடுத்து ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தி திரையரங்கிற்குள் அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துவரும் குட் பேட் அக்லி திரைப்படமும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details