சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் நாளை (செப் 5) வெளியாகிறது. இப்படத்தில் மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள கோட் திரைப்படம் நாளை (செப் 5) வெளியாகிறது. விஜய் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் அவரை திரையில் பார்க்க உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கோட் படத்தில் சிவகார்த்திகேயன், தோனி, அஜித் என பல பேர் கெஸ்ட் ரோலில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. கோட் திரைப்படம் முன்பதிவில் 23 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 900 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட் படம் தொடங்கப்பட்டது முதல் படக்குழு தொடர்ந்து அப்டேட் வழங்கி வரும் நிலையில், தற்போது நாளை படம் வெளியாவதற்கு முன்பாக கடைசி ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பிரேம்ஜி குரலில் தொடங்கும் ப்ரோமோ, விசில் போடு பாடலின் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.