தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'சூர்யா 44' படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட படக்குழு! - suriya 44 - SURIYA 44

Suriya 44 : சூர்யா 27 வருட திரைப்பயணத்தை முன்னிட்டு, சூர்யா 44 படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சூர்யா 44 படத்தின் போஸ்டர்கள்
சூர்யா 44 படத்தின் போஸ்டர்கள் (Credits - karthik subbaraj X Page)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 6, 2024, 9:06 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் கடந்த 1997ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.‌

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த சூர்யா அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இன்றுடன் இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 27ஆண்டுகள் கடந்துள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது.

இதனையடுத்து, தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த‌ மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினியின் வேட்டையன் படம் வருவதால் கங்குவா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, 2டி என்டர்டெயின்மெண்ட நிறுவனமும், ஸ்டோன் பென்ஞ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில், சூர்யாவுக்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின்‌ படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படம் கார்த்திக் சுப்புராஜின் வழக்கமான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் சூர்யாவின் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 27 வருட திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில், சூர்யா பைக்கில் வருவது போன்ற தோற்றம் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக, நேருக்கு நேர் படத்திலும் சூர்யா பைக் ஓட்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தது. அதேபோல் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :'கோழிப்பண்ணை செல்லதுரை' ட்ரெய்லரை பார்த்து இயக்குநர் சீனு ராமசாமியை வாழ்த்திய புதுச்சேரி முதல்வர்! - Puducherry CM praise seenu ramasamy

ABOUT THE AUTHOR

...view details