கோயம்புத்தூர்: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு கோவை கேரளா கிளப்பில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், "இந்நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தோம். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் இங்கு இந்த நிகழ்ச்சியை இடம் மாற்றி ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களும் இடம் பெறும். 3 முதல் 4 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில், 35 பாடல்கள் இடம் பெறும்.
மக்களைப் பார்த்து இலவசமாக பாட சொன்னாலும் பாடுவேன். பாடல்களின் ரசனை ஒவ்வொரு ஊருக்கும் மாறும். உதாரணத்திற்கு நம்மூர் மக்களுக்கு மதுர மரிக்கொழுந்து பாடல்கள் பிடிக்கும் என்றால் வெளியூர்களில் வேறு விதமான பாடல்கள் பிடிக்கும். அது மட்டுமின்றி தமிழர்கள் சினிமா, இசை என்றாலே அதிகம் நேசிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.