தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"4 வருட உழைப்பு; ஸ்பாய்லர்களை வெளியிடாதீர்கள்" - கல்கி படக்குழு வைத்த வேண்டுகோள்! - Kalki 2898 AD - KALKI 2898 AD

Kalki 2898 AD: பிரபாஸ் நடிப்பில் கல்கி திரைப்படம் இன்று வெளியான நிலையில் திரைப்படத்தின் ஸ்பாயிளர்களை வெளியிட வேண்டாம் என படத்தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்கி திரைப்பட போஸ்டர்
கல்கி திரைப்பட போஸ்டர் (Credits-Vyjayanthi Movies)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 11:35 AM IST

சென்னை:நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ள சயின்ஸ் பிக்சன் திரைப்படம் கல்கி 2898 AD. கல்கி திரைப்படம் அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இப்படத்திற்கு போதிய எதிர்பார்ப்பு இல்லாததுக்கு காரணம் பிரபாஸின் முந்தைய படங்கள் கொடுத்த அனுபவங்கள் தான் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கல்கி திரைப்படம் இன்று வெளியான நிலையில் படத் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "இது நான்கு வருட நீண்ட பயணம், தயவு செய்து ஸ்பாய்லர்களை பரப்பாதீர்கள், இந்த உழைப்பிற்காக பலரின் இரத்தமும் வியர்வையும் சிந்தப்பட்டுள்ளது. இது 4 வருட நீண்ட பயணம் மற்றும் இது நாக் அஸ்வின் மற்றும் படக் குழுவினரின் அபரிமிதமான கடின உழைப்பு. இந்தக் கதையை உலகளாவிய அளவில் கொண்டு வருவதற்கு எந்த அடிக்கல்லும் முன் எடுக்கப்படவில்லை.

தரத்தில் சமரசம் செய்ய எந்த இடத்திலும் நாங்கள் இடம் தரவில்லை. இந்த திரைப்படத்தை முன்னோக்கி கொண்டு வர குழுவால் இரத்தமும் வியர்வையும் சிந்தப்பட்டுள்ளது. தயவு செய்து சினிமாவை மதிப்போம், கலைக்கு மதிப்பளிப்போம், திருட்டுத்தனமாக ஈடுபட்டு பார்வையாளர்களுக்கான அனுபவத்தை கெடுக்கும் வகையில் செய்யப்பட வேண்டாம் என பணிவாக வேண்டிக்கொள்கிறோம். திரைப்படத்தின் உள்ளடக்கத்தைப் பாதுகாப்பதற்கும், வெற்றியை ஒன்றாகக் கொண்டாடுவதற்கும் கைகோர்ப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூலி பட மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

ABOUT THE AUTHOR

...view details