தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஹொம்பாலே நிறுவனம் தயாரிப்பில் மூன்று பிரமாண்ட படங்களில் நடிக்கும் பிரபாஸ்! - ACTOR PRABHAS

Actor prabhas and hombale films: ஹொம்பாலே நிறுவனம் சலார் 2 உட்பட பிரபாஸ் நடிக்கும் மூன்று படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் (Credits - ANI)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 8, 2024, 4:03 PM IST

ஹைதராபாத்: பிரபல நடிகர் பிரபாஸ் ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் நடிக்கவுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் உலக அளவில் பிரபலமானார். பாகுபலி படத்தால் அவரது திரை வாழ்க்கையே மாறியது. எந்த ஒரு நடிகரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இந்தியா அளவில் அவரது மார்க்கெட் உயர்ந்தது.

இதனைத்தொடர்ந்து பிரபாஸ் சாகோ, ராதே ஷ்யாம் என பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தார். அந்த படங்கள் பாகுபலி அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ’சலார்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. கேஜிஎஃப் போல ஆக்‌ஷன் படமான சலார் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத்தொடர்ந்து நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ’கல்கி 2898AD’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சலார் படத்தின் 2ஆம் பாகம் தயாராகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் இப்படத்தில் நடிக்கிறார்.

இதையும் படிங்க: 'அமரன்' படம் பாத்துட்டிங்களா?... இன்று ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் பெரிய படங்கள் என்ன தெரியுமா?

இதனை ஹொம்பாலே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சலார் 2 மட்டுமின்றி பிரபாஸ் நடிக்கும் மேலும் இரண்டு படங்களை ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கிறது. 2026 முதல் 2028 வரை மூன்று வருடங்களில் வரிசையாக ஹொம்பாலே நிறுவனம் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்கும் மூன்று படங்கள் வெளியாகிறது. ஹொம்பாலே நிறுவனம் கேஜிஎஃப் 3ஆம் பாகம், காந்தாரா 2ஆம் பாகத்தையும் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details