தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உங்களுக்கு பிடித்தமானவர் பிறந்தநாளுக்கு பாடும் 'Happy Birthday to You' பாடல் உருவான வரலாறு தெரியுமா? - Happy Birthday to You song

Happy Birthday to You song: உலகம் முழுவதும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பாடப்படும் Happy Birthday to You உருவான வரலாறு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

Happy Birthday to You பாடல் குறித்த புகைப்படம்
Happy Birthday to You பாடல் குறித்த புகைப்படம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 6:08 PM IST

ஹைதராபாத்:உலக மக்கள் மத்தியில் ஒருவரது பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் எப்போதும் பாடப்படுவது ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ (Happy birthday to you) பாடல். பல ஆண்டுகளாக உலகில் பல பில்லியன் மக்களால் சாமானிய மனிதரின் பிறந்தநாள் என்றாலும் அல்லது மிகப்பெரும் தலைவர்களின் பிறந்தநாள் என்றாலும் சரி, பல்வேறு நாடுகளில், பல்வேறு கலாச்சாரங்களை கடந்து ஹேப்பி பர்த்டே பாடல் பாடப்படுகிறது.

ஆனால் இந்த ஹேப்பி பர்த்டே என்ற மெலடி பாடல் எங்கு பிறந்தது தெரியுமா? அப்பாடல் குறித்து வரலாறு மற்றும் அதனால் ஏற்பட்ட கலாச்சார மாற்றம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவை சேர்ந்த பட்டி மற்றும் மில்ட்ரெட் ஹில் ஆகிய இரண்டு சகோதரிகள் good morning to all என்ற பாடலை மழலையர் பள்ளிக்காக உருவாக்கினர். ஆனால் இந்த பாடல் பிரபலமாகி 20ஆம் நூற்றாண்டில் பிறந்தநாள் வாழ்த்து பாடலாக மாறியது. good morning to all என்ற பாடல் வரிகள் Happy Birthday to You என்று மக்களால் மாற்றப்பட்ட பாடல் பின்பு வரலாறு படைத்தது.

1893ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சகோதரிகள், கற்பித்தலில் இசையை வைத்து புதுமையை ஏற்படுத்தப்பட்ட பாடல் பின்னர் பிரபலமானது. Happy Birthday to You என்ற வரிகள் 1901இல் அறிமுகமான நிலையில், பாடல் முழுவதுமான 1911இல் உருவாக்கப்பட்டது. பின்னர் 1930களில் இப்பாடல் மிகவும் பிரபலமாகி, காப்புரிமை பிரச்சனை எழுந்தது. பட்டி, ஹில் சகோதரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் இப்பாடல் பயன்பாட்டிற்கு எதிராக காப்புரிமை வழக்கு தொடுத்தனர். பின்னர் அவர்கள் காப்புரிமை பெற்றாலும், பாடலுக்கான உரிமை பலமுறை கைமாறி 1988ஆம் ஆண்டு வார்னர் கம்பெனி பெற்றது.

இதனால் Happy Birthday to You பாடல் பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிறந்தநாள் காட்சிகளில் வேறு பாடல்கள் பாடப்பட்டது. பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் வார்னர் இசை குழு தோல்வியடைந்ததை அடுத்து, Happy Birthday to You பாடல் பொதுவுடைமை ஆக்கப்பட்டது. கரோனா காலகட்டத்தில் கை கழுவுதல் பற்றி முக்கியத்துவம் ஏற்படுத்த Happy Birthday to You பாடல் இசை பயன்படுத்தப்பட்டது.

முன்னதாக கடந்த 1962ஆம் ஆண்டு மர்லின் மன்ரோ அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் 45ஆவது பிறந்தநாளுக்கு Happy Birthday to You என்ற பாடலை Happy Birthday, Mr. President என மாற்றி பாடினார். இது மிகவும் பிரபலமானது. அதேபோல் Happy, Happy Birthday Baby, Happy Birthday, Sweet Sixteen, Birthday, Happy Birthday Darlin ஆகிய பாடலும் பிரபலமானது. Happy Birthday to You பாடல் Towering Song என்ற விருதையும் பெற்றது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வெப் சீரிஸில் இணைந்து நடிக்கும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள்? - vijay sethupathi with manikandan

ABOUT THE AUTHOR

...view details