தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கூலி படப்பிடிப்பில் மீண்டும் ரஜினி - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன அப்டேட்! - LOKESH KANAGARAJ ABOUT COOLIE

கூலி படத்தின் படப்பிடிப்பை 6 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்த் வரும் 16ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கூலி பட போஸ்டர், லோகேஷ் கனகராஜ்
கூலி பட போஸ்டர், லோகேஷ் கனகராஜ் (Credits - lokesh kanagaraj X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2024, 6:21 PM IST

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரது நடிப்பில் கடந்தாண்டு வந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். கடந்த வியாழன் அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:'கேம் சேஞ்சர்' படத்தின் முக்கிய அப்டேட் வந்தாச்சு! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் நாகர்ஜூனா, உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் ஷஹீர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இதன் இடையே நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த செப்.30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், இதயத்தில் (aorta) இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாத (transcatheter) stent முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தனர். அதன் பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “கூலி படம் எல்சியூவில் வராது. இது தனிப்படம்‌. இன்னும் 6 மாதங்களில் படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் வரும் 16ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்” என்று தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details