தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எளிமையாக நடந்த இயக்குநர் அமீர் மகள் திருமணம்..! திரைப் பிரபலங்கள் பங்கேற்பு! - Director Ameer daughter wedding - DIRECTOR AMEER DAUGHTER WEDDING

Director Ameer: தமிழ் திரைப்பட இயக்குநர் அமீரின் மகள் திருமண விழா மிக எளிமையாக மதுரையில் நடைபெற்றது. இதில், தமிழ் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர்.

அமீர் மகள் திருமண குழு புகைப்படம்
அமீர் மகள் திருமண குழு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 9:44 PM IST

மதுரை:தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான அமீர் மகள் அனிநிஷாவின் திருமண விழா, மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இயக்குநர் அமீர் மகள் திருமணம் விழா வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திருமண விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் சேரன், வெற்றிமாறன், சசிகுமார், சமுத்திரக்கனி, சரவணன், கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன், சுப்பிரமணியம் சிவா மற்றும் நடிகர்கள் ஆர்யா, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

திருமண விழாவிற்கு வருகை தந்த திரையுலகத்தினரை இயக்குநர் அமீர் ஆரத் தழுவி வரவேற்றார். இந்த திருமண விழாவில் இயக்குநர் அமீர் மணமகனிடம் தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்ட பின்பாக திருமணம் நடைபெற்றது.

அப்போது மண்டபத்தில் கூடியிருந்த இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் முன்பாக திருமணம் நடைபெற்றதையடுத்து கைதட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின் (துஆ) வின் போது மணமக்கள் நீடுழி வாழ வேண்டி இயக்குநர் சமுத்திரக்கனி மனமுருக கைகூப்பி பிரார்த்தனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மணமக்களோடு சேர்ந்து திரையுலகத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்களிடம் இருந்து மணமக்கள் எந்த பரிசுப் பொருட்களோ அல்லது மொய் பணமோ வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மிஸ் திருச்சி அழகிப் போட்டி: மாடல்களும் மயில் போன்ற ராம்ப் வாக்கும்...! - TRICHY FASHION PAGEANT 2024

ABOUT THE AUTHOR

...view details