ஹைதராபாத் : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா நடிப்பில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம் குபேரா. இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.