ஹைதராபாத்: பிரபல கன்னட நடிகர் யாஷ் இயக்குநர் நிதேஷ் திவாரியின் ராமாயணம் இதிகாச திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் தனது இரண்டாவது பாலிவுட் படத்தில் நட்சத்திர நடிகர் ஷாருக்கானுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப்(KGF) திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் யாஷ், ராமாயணம் கதையை தழுவி இயக்குநர் திவாரி இயக்கவுள்ள படத்தில் ராவணனாக நடிக்கவுள்ளார். மேலும் யாஷ் கேஜிஎஃப் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் பிரபலமடைந்ததால் பாலிவுட்டில் தடம் பதிக்க விரும்புவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நடிகர் யாஷ் ராமாயணம் படத்தில் நடிக்க தயாராகி வரும் நிலையில், தனது இரண்டாவது பாலிவுட் படம் குறித்து இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார். அப்போது ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. மேலும் இரண்டாவது படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.