தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சி.எம் முதல் சினிமா பிரபலங்கள் வரை.. களைகட்டிய மு.க.முத்துவின் பேத்தி திருமணம்..! - PRODUCER AKASH BHASKAR WEDDING

சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் - தரணீஸ்வரி திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட ஏராளமான அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் - தரணீஸ்வரி திருமண விழா
ஆகாஷ் பாஸ்கர் திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 10:50 PM IST

Updated : Nov 22, 2024, 9:25 AM IST

சென்னை: நானும் ரௌடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல், பாவக் கதைகள் உள்ளிட்ட படங்களில் விக்னேஷ் சிவனுக்கு உதவி இயக்குநராக இருந்தவர் தான் ஆகாஷ் பாஸ்கர். இவர் டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இந்த டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக அவர் தனுஷ் நடித்து இயக்கும் 'இட்லி கடை' படத்தை தயாரித்து வருகிறார். இத்தகைய சூழலில், இன்று (நவ.21) ஆகாஷ் பாஸ்கர் - தரணீஸ்வரி ஜோடியின் திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களுடன் நடிகர் தனுஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுமட்டும் அல்லாது, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, கேவின்கரே குழும சி.கே.ரங்கநாதன், நடிகர்கள் விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், அருள்நிதி, ஹரிஷ் கல்யாண், மஹத், கலையரசன், டாக்டர் தீரஜ், பாலசரவணன், பிரேம் என ஏராளமான அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையும் படிங்க:நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்: விரைவில் வெளியாகிறது அதிகாரபூர்வ தகவல்!

அதேபோல, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர்கள் அனிருத், தரண்குமார், இயக்குநர்கள் ரவிகுமார், அட்லீ, தமிழரசன் பச்சமுத்து, லைகா தமிழ்குமரன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தயாரிப்பாளர் அருண் விஸ்வா, பாடலாசிரியர் விவேக், நடிகைகள் தேஜு அஸ்வினி, காயடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கிடையில், ஆகாஷ் பாஸ்கர் - தரணீஸ்வரி ஜோடியின் திருமண விழாவின் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, சில தினங்களாக நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகியோருக்கு இடையிலான பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வரும் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் நயன்தாராவும், தனுஷும் இந்த திருமணவிழாவில் பங்கேற்றதோடு அவர்கள் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தில் வைரலாகியுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 22, 2024, 9:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details