ஐதராபாத் :மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இரண்டு மோட்டர் பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஆறு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி தலைமறைவாகினர். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சல்மான் கான் வீட்டின் முன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வெளியான பேஸ்புக் பதிவின் மூலம் உறுதி செய்யப்பட்டதாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த அன்மோல் பிஷ்னாய் பெயரில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அந்த பதிவில், "அடுத்த முறை தாக்குதல் நிச்சயம் தவறாது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பதிவில், "இது உங்களுக்கு ஒரு டிரெய்லரைக் காண்பிப்பதற்காகவே, எங்கள் சக்தியை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக இந்த தாக்குதல்.