தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அருணுக்காக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா... காதல் மழையில் பிக்பாஸ் வீடு! - BIGG BOSS 8 TAMIL

Bigg Boss 8 tamil: பிக்பாஸ் வீட்டிற்கு இன்று கடந்த பிக்பாஸ் சீசனை வென்றவரும், போட்டியாளர் அருணின் காதலியுமான அர்ச்சனா என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் விஜய் சேதுபதி, போட்டியாளர் அருண்
பிக்பாஸ் விஜய் சேதுபதி, போட்டியாளர் அருண் (Credits - Vijay television Instagram Account)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 27, 2024, 12:54 PM IST

சென்னை: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி தற்போது 80 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. கடந்த 7 சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் எவிக்‌ஷனில் நடிகர் ரஞ்சித் வெளியேறினார்.

இந்த வாரம் எந்த வித கடினமான டாஸ்கும் இல்லாமல் ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. ஃப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த உறவினர்கள் அனைவரிடமும் மற்ற போட்டியாளர்களிடம் தங்களுக்கு எதாவது முரண்பாடுகள் உள்ளதா என கேட்கப்பட்டது. இதற்கு அனைவரும் தங்களது முரண்பாடுகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (டிச.27) காலை வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஷ்ணுவிடம் தனது காதலை வெளிப்படையாக தெரிவித்தார். பிக்பாஸ் வரலாற்றில் காதலை வெளிப்படுத்திய முதல் போட்டியாளர் சௌந்தர்யா தான். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர் அருணின் காதலியும், கடந்த 7வது சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார். இது அருணுக்கு பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது.

இதையும் படிங்க:பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை... ”Will You Marry Me” - ப்ரபோஸ் செய்த சௌந்தர்யா! - BIGG BOSS 8 TAMIL

இதனைத்தொடர்ந்து அருணுக்கு அர்ச்சனா நன்றாக விளையாட வேண்டும் என அறிவுரை வழங்கினார். அர்ச்சனா ‘இப்போது நீ எப்படி இருக்கியோ, அதுவே நல்ல இருக்கு’ என கூறினார். பின்னர் அருண், அர்ச்சனாவிடம் அடுத்த வாரம் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என உறுதி அளித்தார். இன்று காலை சௌந்தர்யா விஷ்ணுவிடம் காதலை வெளிபடுத்திய நிலையில், அர்ச்சனா என்ட்ரீ என பிக்பாஸ் வீடு காதல் மழையில் நனைந்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 8 இன்னும் சில வாரங்களில் முடிவடைகிறது. அடுத்த வாரம் இறுதிப் போட்டிக்கான ’டிக்கெட் டூ பைனல்’ (ticket to finale) நடைபெறவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details