சென்னை:நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள 63வது படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனவும், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தில் அஜித், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.