சென்னை:கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அஜித்குமார் நடிப்பில் வெளியான ’விடாமுயற்சி’ திரைப்படம் ஒரு மாதத்திற்குள் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் பணிகள் நிறைவடையாததால் பொங்கலுக்கு வெளியாகமால் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகியது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.
முழுக்க முழுக்க அஜார்பைஜானில் படம்பிடிக்கப்பட்ட ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பரவலாக பாரட்டப்பெற்றது. பரந்து விரிந்த நிலபரப்பின் காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன. தற்போது உலகம் முழுவதும் ’விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.ன்
ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் காட்சிகள் இல்லை, வலுவான சண்டை காட்சிகள் இல்லை என கலவையான விமர்சனங்களையே ’விடாமுயற்சி’ பெற்றது. ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக புகழப்பட்டதே விடாமுயற்சிக்கு சோதனையாகவும் அமைந்தது. கடத்தப்பட்ட மனைவியை தேடி கண்டுபிடிக்கும் கணவனாக அஜித் யதார்த்தமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.