சென்னை: பிரபல நடிகை ராஷி கண்ணா தனது பிரேக்கப் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ராஷி கண்ணா ஹிந்தியில் 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இந்த படத்தில் அதர்வா, ராஷி கண்ணா ஜோடி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து 'அடங்க மறு' படத்தில் நடித்தார். பின்னர் விஜய் சேதுபதியுடன் 'சங்கத் தமிழன்', 'துக்ளக் தர்பார்' ஆகிய படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் ராஷி கண்ணா நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் பேசிய வசனங்கள் சமூக வலைதளங்களில் மீம் டெம்ப்ளேட்டாக வலம் வந்தது.
பின்னர் சர்தார், அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் விக்ராந்த் மேசி, ராஷி கண்ணா நடிப்பில் 'The Sabarmathi Report' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் தனது இன்ஸ்க்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்தார் ராஷி கண்ணா. அப்போது அவர் காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.