சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
இதனைத்தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சண்டக்கோழி 2, அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கத்தில் சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்து பாராட்டை பெற்றார். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்றார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் ’ரகு தாத்தா’ திரைப்படம் வெளியானது. கீர்த்திக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். அவரது ஒவ்வொரு பதிவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கும், அவரது 15 வருட நண்பரான ஆண்டனி தாட்டில் ஆகிய இருவருக்கும் டிசம்பர் மாதம் திருமணம் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது.