தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.. பிரியாணி போட்டு அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்! - Sivakarthikeyan brithdaycelebration

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை எஸ்கே 23 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழுவினருடன் விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

சென்னை
சென்னை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 10:30 PM IST

சென்னை: சின்னதிரை முதல் வெள்ளித்திரை வரை பயணம் செய்தவர்கள் ஏராளம். ஆனால் அசுர வளர்ச்சி பெற்று ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர்கள் எனப் பார்த்தால் அது விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் தான் இருக்கின்றது.

அப்படி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது பயணத்தைத் தொடங்கி அடுத்த 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி தற்போது மாஸ் ஹீரோவாக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan Brithday Celebration

நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத் திறமையுடன் தமிழ் சினிமாவில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எலியனை மையமாக வைத்து உருவான அப்படம் குழந்தைகளைக் கவர்ந்தது.

தற்போது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று (பிப்.16) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அவரது திரையுலக பயணத்தில் இதுவரையில் இல்லாத ஓர் புதிய பரிமாணத்தில் அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை இன்று (பிப்.17) படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

இதையடுத்து தனது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணியைப் பரிமாறினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க:வானிலை மாற்றத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய இன்சாட் 3டிஎஸ்.. விண்ணில் சீறிப்பாய்ந்தது..!

ABOUT THE AUTHOR

...view details