தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வடக்குப்பட்டி ராமசாமி; ரசிகர்களுடன் படம் பார்த்த சந்தானம்! - vadakkupatti ramasamy review

Vadakkupatti Ramasamy: வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனவும், இரண்டு மணி நேரம் கவலையை மறந்து சிரித்து மகிழ்ச்சியுடன் படம் பார்ப்பீர்கள் எனவும் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம் பேட்டி
நடிகர் சந்தானம் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 6:01 PM IST

Updated : Feb 4, 2024, 3:54 PM IST

நடிகர் சந்தானம் பேட்டி

சென்னை:டிக்கிலோனா படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இத்திரைப்படம் இன்று (பிப்.2) திரையரங்குகளில் வெளியானது. நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் சுமார் 600 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இதையடுத்து, சந்தானத்தின் ரசிகர் மன்றத்தின் சார்பாக திரையரங்கிற்கு முன்பு பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை தனது ரசிகர்களுடன் பார்ப்பதற்காக சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு சந்தானம் வருகை புரிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், “வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்கு வெற்றி திரையரங்கத்திற்கு வந்துள்ளேன். ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் படத்தை பார்த்தனர்.

டிடி ரிட்டன்ஸ் படம் போல், இதுவும் மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறும். அனைவரும் திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பாருங்கள். இரண்டு மணி நேரம் கவலையை மறந்து சிரித்து மகிழ்ச்சியுடன் படம் பார்ப்பீர்கள். படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

இப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ், ஜான் விஜய், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜெந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

இதையும் படிங்க:“தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கருத்து கூறியதே இல்லை” - தன்யா பாலகிருஷ்ணா விளக்கம்!

Last Updated : Feb 4, 2024, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details