சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission) மூலம் குரூப் 4 பதவியில் அடங்கிய, கிராம நிர்வாக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், வனக்காப்பாளர், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் ஆகிய பதவிகளில் உள்ள சுமார் 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பங்களை மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் எனவும், இந்த பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 அடங்கிய பதிவுகளுக்கான நேரடி நியமனத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் தேதி: குரூப் 4 பணியிடங்களுக்கு இணைவழி மூலமாக வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அப்படி பூர்த்தி செய்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்தவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 9ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.
இந்த பணியிடங்களுக்கு தேர்வர்கள் www.tnpsc.gov.inமற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கு அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மட்டுமே, அதன் பின்னர் விண்ணப்பங்களில் எந்தவித திருத்தமும் செய்ய முடியாது.
பதவி விருப்பத் தெரிவு:தமிழ்நாடு வனச் சார்நிலை பணியில் அடங்கிய தமிழ்நாடு வனத்துறையில் உள்ள வன காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வன காவலர் மற்றும் வன காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கு சேர விரும்பினால் விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் பிற பணியில் அனைத்தும் சேர விரும்பினால், அனைத்து பதவிகளும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
வ.எண் | பதவியின் பெயர் | காலிப்பணியிட எண்ணிக்கை |
1. | கிராம நிர்வாக அலுவலர் | 108 |
2. | இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) | 2,442 |
3. | இளநிலை உதவியாளர் (பிணையம்) | 44 |
4. | தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - இளநிலை உதவியாளர் | 10 |
5. | தமிழ்நாடு வக்பு வாரியம் - இளநிலை உதவியாளர் | 27 |
6. | தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் - இளநிலை உதவியாளர் | 49 |
7. | தமிழ்நாடு சிறு தொழில் கழகம் - இளநிலை உதவியாளர் | 15 |
8. | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - இளநிலை உதவியாளர் | 7 |
9. | தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் - இளநிலை உதவியாளர் | 10 |
10. | தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதி அமைச்சுப்பணி, தலைமைச் செயலகம் பணி, சட்டமன்ற பேரவை செயலகப்பணி - தட்டச்சர் | 1,653 |
11. | தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - தட்டச்சர் | 3 |
12. | தமிழ்நாடு சிறு தொழில் கழகம் - தட்டச்சர் | 3 |
13. | தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் - தட்டச்சர் | 39 |
14. | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - தட்டச்சர் | 7 |
15. | தமிழ்நாடு அமைச்சுப்பணி / நீதி அமைச்சுப்பணி - சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை 3) | 441 |
16. | தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - சுருக்கெழுத்து தட்டச்சர் | 2 |
17. | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - சுருக்கெழுத்து தட்டச்சர் | 2 |
18. | தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - நேர்முக உதவியாளர் (சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 2) | 1 |
19. | தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - நேர்முக எழுத்தர் (சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3) | 2 |
20. | தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் |