சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று 731 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிகளில் தற்பொழுது பிஎட் 2 ஆண்டுகள் பட்டப்படிப்பும், சில கல்லூரிகளில் ஒருங்கிணைந்த பிஎட் 4 ஆண்டுகள் படிப்பும் வழங்கப்படுகிறது.
ஆசிரியர் கல்வியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் 75 சதவீதம் நேரடியாக வருகை புரிந்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், சில கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்பிற்கு வராவிட்டாலும் வருகை புரிந்ததாக கூறி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) ராஜசேகரன் அனைத்து கல்லூரியின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்துடன் இணைவு பெற்ற, சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் பட்ட வகுப்புகளில் வெளி மாநிலத்தில் இயங்கும் Global Academy போன்ற பல்வேறு சேர்க்கை மையங்கள் மூலமாக மாணவர்களை Irregular முறையில் வகுப்புகளுக்கே வராமல் சேர்க்கை செய்து தேர்வு எழுத அனுமதிப்பதாக UGC-யில் இருந்து புகார் மனு பல்கலைக்கழகத்தில் பெறப்பட்டுள்ளது.