தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வு துவக்கம்! - MBBS BDS Counseling

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் காலியாக உள்ள 2,049 இடங்களில் 2ம் சுற்றுக் கலந்தாய்வின் மூலம் மறு ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு பெறுவதற்கு இன்று (செப்.11) முதல் 13 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனவும், 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விரும்பும் கல்லூரியை தேர்வுச் செய்யலாம் என்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவர் - கோப்புப்படம்
மருத்துவர் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 4:13 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கக்கூடிய எம்பிபிஎஸ், பி.டி.எஸ் இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 21ஆம் தேதி துவங்கியது.

இதில், எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3971 இடங்களுக்கும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 30 இடங்களுக்கும், கே.கே நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 91 இடங்களுக்கும் என 3,992 இடங்களிலும், 22 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 3,302 இடங்களும், 3 தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 433 இடங்களில் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

அதேபோல் பி.டி.எஸ் படிப்பில் சென்னை புதுக்கோட்டை கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 195 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,790 இடங்களும் நிரப்ப அனுமதிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7,568 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,786 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், தெலுங்கு மைனாரிட்டி கல்லூரியில் 7 பிடிஎஸ் இடங்களும், 321 என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடங்கள் எம்பிபிஎஸ் படிப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் 2ஆம் சுற்றுக் கலந்தாய்விற்கு செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏற்கனவே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இடங்களை தேர்வு செய்தவர்கள் வேறுக் கல்லூரியில் சேர்வதற்கும், புதியதாக இடங்களை தேர்வு செய்யவும் பதிவு செய்யலாம்.

அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரி மற்றும் பாடத்தையும் பதிவு செய்யலாம் எனவும், அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 18ஆம் தேதி வெளியிடப்பட்டு, 19ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், மாணவர்கள் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில், மாற்றுதிறனாளிகள் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் சென்னை மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 1 இடமும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பிடிஎஸ் படிப்பில் தமிழ்நாடு பல் மருத்துவக்கல்லூரி, புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 இடங்களும், 15 தனியார் பல்மருத்துவக்கல்லூரிகளில் 19 இடங்களும் உள்ளது.
  • அரசு ஒதுக்கீட்டில், எம்பிபிஎஸ் படிப்பில் சென்னை மருத்துவக்கல்லூரி உட்பட 22 கல்லூரிகளில் 75 இடங்களும், கே.கே நகர் இஎஸ்ஐஇ கல்லூரியில் 2 இடங்களும், 22 தனியார் மருத்துவக்கல்லூரியில் 268 இடங்களும், 3 தனியார் பல்கலைக்கழகத்தில் 52 இடங்களும், வேலூர் கிருத்துவக்கல்லூரியில் 3 இடங்களும் உள்ளன.
  • பிடிஎஸ் படிப்பில், அரசு ஒதுக்கீட்டில் 3 அரசு மருத்துவக்கல்லூரியில் 80 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 624 இடங்களும் உள்ளது.
  • நிர்வாகம் மற்றும் என் ஆர்ஐ லேப்ஸ் இடங்களுக்கான ஒதுக்கீட்டில், எம்பிபிஎஸ் படிப்பில் 22 தனியார் மருத்துவக்கல்லூரியில் 560 இடங்களும், 3 தனியார் பல்கலைக்கழகத்தில் 144 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 215 இடங்களும் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details