தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

சென்னை ஐஐடி எக்ஸிக்யூட்டிவ் எம்பிஏ படிப்பு: விண்ணப்பிக்கத் தயாரா?

வேலையிலிருக்கும் நடுத்தர நிலை நிர்வாகத்தினருக்கான, இரண்டாண்டு எக்ஸிக்யூட்டிவ் எம்பிஏ படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 20, 2024 வரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

IIT Madras Management Department Opens Applications for Executive MBA Program
சென்னை ஐஐடி வழங்கும் EMBA படிப்பு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 4:24 PM IST

சென்னை ஐஐடி (IIT Madras) நிர்வாகம் மற்றும் மேலாண்மைத் துறை (DoMS) தனது எக்ஸிக்யூட்டிவ் எம்பிஏ (EMBA) படிப்பிற்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பத் துறையில் வெற்றி பெற விரும்பும் நடுத்தர நிலை தொழில் வல்லுநர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இப்பயிற்சி சிறந்ததாக இருக்கும். தற்போதைய வணிக உலகத்தின் சவால்களைச் சந்திக்க தேவையான மேலாண்மை அறிவு மற்றும் திறன்களை இந்த படிப்பு வளர்க்க உதவுகிறது.

இரண்டு வருட படிப்பான இது, வேலைப்பளுவுக்கு பாதிப்பில்லாமல், வார இறுதியில் வகுப்புகளைக் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) கொண்டு நடத்தப்படுகிறது. இதனால், வேலையைத் தொடர்வதுடன், புதிய வாய்ப்புகளைப் பெறும் வகையில் இந்த கல்வி பயணத்தை மேற்கொள்ளலாம்.

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 அக்டோபர் 2024.

விண்ணப்பதாரர்கள், https://doms.iitm.ac.in/admission/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக இந்த படிப்பிற்கு பதிவுசெய்யலாம்.

சிறப்பு அம்சங்கள்: இந்தப் படிப்பின் வாயிலாக மாணவர்கள், இன்று துரிதமாக மாறிவரும் தொழில் சூழலில் முன்னேறத் தேவையான திறன்களையும், தொழில்முனைவைப் பாதுகாக்கும் கற்றல்களையும் பெற முடியும் என்று நிர்வாகத் துறையின் தலைவர், பேராசிரியர் மு. தென்மொழி தெரிவித்துள்ளார்.

EMBA: மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த திறனின் அடிப்படையில் சர்வதேச கற்றல் நிகழ்ச்சிகள், முன்னாள் மாணவர்களின் வலுவான நெட்வொர்க் ஆகியவற்றால் மிகச்சிறந்த கற்றல் அனுபவத்தை பெறுவார்கள் என்று, பேராசிரியர்கள் வி. விஜயலட்சுமி மற்றும் எஸ். ஸ்ரீநிவாசன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க
  1. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் மேலும் 2,208 இடங்கள் சேர்ப்பு.. துறைவாரியாக காலிப் பணியிடங்கள் விவரம்!
  2. ரம்பாவின் ஆசையை நிறைவேற்றும் கணவர்! ஏழை மக்களுக்கு உதவ புதிய திட்டம்!
  3. சென்னை ஐஐடியில் இணையப் பாதுகாப்பு மையம் தொடக்கம்

தேர்வு செயல்முறை: விருப்பம் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நவம்பர் 8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் நேரடி தேர்வில் பங்கேற்கவேண்டும். இதில், எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் இடம்பெறும். எழுத்துத் தேர்வு வணிக நுண்ணறிவு, தீர்க்கமுடிவுகள், கணக்கியல் திறன் மற்றும் மொழி திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்படும்.

முடிவுகள்: தேர்வு முடிவுகள் 2024 டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்.

வகுப்புகள்: 2025 ஜனவரி மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும்.

இந்தப் படிப்பை உலகத்தரம் வாய்ந்த கல்வியாளர்கள், தொழில் துறையில் ஆரோக்கியமான அனுபவம் கொண்டவர்கள் நடத்துகின்றனர். தொழில் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடன் இதில் படிக்கும் மாணவர்கள் தொடர்பு கொண்டு, தொழில்நுட்பத் துறையில் வலுவான இணைப்பை உருவாக்க முடியும். மேலும், இது அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details