சென்னை:பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் 3 சுற்று கலந்தாய்விற்கு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 381 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும், முதல் மற்றும் 2ஆம் சுற்றுக் கலந்தாய்வின் மூலம் 71 ஆயிரத்து 110 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
கல்வி ஆலாேசகர் அஸ்வின் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இது குறித்து மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு 3ஆம் சுற்று கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தரவரிசை எண் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 603 முதல் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 601 வரையுயில், 85 ஆயிரத்து 295 மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் தரவரிசை எண்- 10 ஆயிரத்து 838 முதல் 31 ஆயிரத்து 788 வரையில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில், 433 கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதில் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியிட்டப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 8 ஆயிரத்து 308 இடங்கள், பொதுப்பிரிவில் 62 ஆயிரத்து 802 இடங்கள் என 71 ஆயிரத்து 110 இடங்கள் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், 3 ஆம் சுற்றுக் கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 23) ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகியது. கட்-ஆஃப் மதிப்பெண் 141.955 முதல் 77.50 வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வருகிற 25 ஆம் தேதி மாலை 5 மணி வரை தங்களுக்கு விரும்பும் கல்லூரிகளின் பட்டியலை பதிவு செய்யலாம். தொடர்ந்து மாணவர்கள் கொடுத்துள்ள விருப்ப பட்டியலின் அடிப்படையில், 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதனை மாணவர்கள் 27 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் கொடுத்த விருப்பத்தின் அடிப்படையில், 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு, இடத்தை உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி சேர்வதற்கான சேர்க்கை ஆணையும், UPWARD கொடுத்த மாணவர்களுக்கு அதற்கான படிவமும் மாணவர்களுக்கு அனுப்பப்படும். தொடர்ந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் மாணவர்கள் கல்லூரியில் சென்று சேர வேண்டும்.
இது குறித்து கல்வி ஆலாேசகர் அஸ்வின் கூறுகையில், “ தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் 2 சுற்று முடிந்த நிலையில், 39.39 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளது. 69 ஆயிரத்து 147 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களின் சதவீதம் முதல் சுற்றில் 32 சதவீதமாக இருந்தது. 2 வது சுற்றில் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது.
87 ஆயிரத்து 422 மாணவர்கள் அழைக்கப்பட்டதில், 37 ஆயிரத்து 89 மாணவர்கள் பங்கேற்கவில்லை. முதல் மற்றும் 2 வது சுற்றில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 439 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 69 ஆயிரத்து 147 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 46 ஆயிரத்து 292 மாணவர்கள் பங்கேற்க வில்லை.3 வது சுற்றில் மாணவர்கள் சரியான கல்லூரியை பார்த்து தேர்வுச் செய்ய வேண்டும்.
2 ஆம் சுற்று கலந்தாய்வின் முடிவில், 433 கல்லூரிகளில் 14 கல்லூரியில் ஒரு இடம் நிரம்பவில்லை. 42 கல்லூரிகளில் 1 சதவீதமும், 178 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும், 263 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான இடங்களும் நிரம்பியுள்ளது. மேலும், 170 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்கும் மேல் நிரம்பி உள்ளது. 75 சதவீதத்திற்கும் மேல் 69 கல்லூரிகளிலும், 80 சதவீதத்திற்கும் மேல் 60 கல்லூரிகளிலும், 90 சதவீதத்திற்கும் மேல் 40 கல்லூரிகளும், 29 கல்லூரியில் 95 சதவீதம், 100 சதவீதம் 4 கல்லூரியிலும் நிரம்பி உள்ளது.
பாடவாரியாக கம்ப்யூட்டர் சயின்ஸ் 40 ஆயிரத்து 887 இடங்கள் என 60 சதவீதமும், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் 11 ஆயிரத்து 406 இடங்கள், எலக்ட்ரிக்கல் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் 4 ஆயிரத்து 312 இடங்கள், மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆயிரத்து 645 இடங்கல், சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 1,980 இடங்கள் என 90 சதவீதம் இடங்கள் 5 பிரிவுகளில் நிரம்பியுள்ளது. மற்ற உள்ள பிறத்துறைகளில் 6 ஆயிரத்து 917 இடங்கள் என 10 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் இனி தாமதம் இருக்காது: புதிய தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதி