தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

பொறியியல் படிப்பில் 55 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் - கல்வியாளர் கணிப்பு! - engineering course seats vacant - ENGINEERING COURSE SEATS VACANT

Career guidance Ashwin: பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் முதல் மற்றும் 2ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 71 ஆயிரத்து 110 இடங்கள் நிரம்பி உள்ள நிலையில், 3ம் சுற்றில் தற்காலிகமாக 63 ஆயிரத்து 843 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கலந்தாய்வு முடிவில், 55 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வியாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம், கல்வியாளர் அஸ்வின்
அண்ணா பல்கலைக்கழகம், கல்வியாளர் அஸ்வின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 7:48 PM IST

Updated : Aug 26, 2024, 9:35 PM IST

சென்னை: 2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ , பி.டெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியது. அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் மற்றும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 8 ஆயிரத்து 308 இடங்களும், பொதுப்பிரிவில் 62 ஆயிரத்து 802 இடங்களும் என 71 ஆயிரத்து 110 இடங்கள் நிரம்பி உள்ளது. 3ஆம் சுற்றுக் கலந்தாவிற்கான தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 63 ஆயிரத்து 843 பேருக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 62 ஆயிரம் மாணவர்களும் இடங்களை உறுதி செய்தால், ஒட்டுமொத்தமாக நிரம்பிய இடங்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கல்வியாளர் அஸ்வின் கூறும்போது, “தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் 3வது சுற்று தற்காலிக ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் கடந்தாண்டை விட, நடப்பாண்டில் 31 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கலந்தாய்வில் வந்தது.

கம்ப்யூட்டர் பிரிவில் 31 ஆயிரம் இடங்களும் வந்தன. இந்தாண்டு 55 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 2ஆம் சுற்று முடிவில் 69 ஆயிரத்து 147 இடங்கள் நிரம்பி உள்ளன. கடந்தாண்டு 3வது சுற்றில் 50 சதவீதம் மாணவர்கள் வரவில்லை. நடப்பாண்டிலும் தற்காலிக ஒதுக்கீட்டை பார்க்கும் போது 50 சதவீதம் மாணவர்கள் வரவில்லை. நடப்பாண்டில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 528 இடங்களில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55 ஆயிரம் இடங்கள் காலியாக வரும். சென்ற வருடம் 69.17 சதவீதம் இடங்கள் நிரம்பி இருந்தது. இந்தாண்டும் 68 சதவீதம் இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு ஒரு சதவீதம் அதிகமாக நிரம்பும். சென்ற ஆண்டு 51 ஆயிரத்து 300 என இருந்து நிலையில் இந்தாண்டு 4 ஆயிரம் இடங்கள் அதிகமாக 55 ஆயிரம் இடங்கள் என அதிகமாகும். கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science) தொடர்புடைய பிரிவில் மாணவர்களிடம் அதிகளவில் வரவேற்பு இருந்தது.

எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் (Electronics And Communication) பிரிவிலும் ஆர்வம் இருந்தது. எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் (Electrical and Electronics) பிரிவிற்கும் மாணவர்களிடம் வரவேற்பு இருந்தது. மெக்கானிக்கல், சிவில் பிரிவிற்கு கடந்தாண்டைவிட இந்தாண்டு சற்று குறைந்து இருந்ததை பார்த்தோம். டாப் 25 கல்லூரிகளுக்கு மாணவர்களிடம் அதிக விரும்பம் இருந்தது. மாணவர்கள் தரமான கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.

கல்லூரிகள் தேர்வு தொடர்பான விழிப்புணர்வு மாணவர்களிடம் ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகிறது. சிறந்த கட்டமைப்பு, ஆசிரியர்கள், ஆய்வக வசதிகள், வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் கல்லூரிகள் மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 433 கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்களுக்கு மேல் இரண்டாம் சுற்று முடிவில் 120 கல்லூரிகள் தான். மீதமுள்ள 313 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவும், 14 கல்லூரியில் ஒரு மாணவரும் சீட் எடுக்காமலும் இருந்தனர்.

42 கல்லூரிகளில் 1 சதவீதத்திற்கும் கீழ் இடங்களை தேர்வு செய்துள்ளனர். மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாலும், கிராமப்புறம், ஏழை மாணவர்கள் நல்ல கட்ஆப் மதிப்பெண் வைத்திருந்தாலும் எந்தக் கல்லூரி நல்லக் கல்லூரி என தெரியாமல் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். எனவே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தன்னாட்சிக் கல்லூரிகளிலும் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் - அண்ணா பல்கலை செக்! - anna University

Last Updated : Aug 26, 2024, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details