சென்னை: இந்தியர்களின் சேமிப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், பரிசாக வழங்குவதற்கும் தங்கம் பயன்படுத்தப்படுவதால், இந்தியர்களிடம் தங்கத்தின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக உயர்வைக் கண்டு வந்த தங்கம், விலை குறையும்போது மட்டும் சிறிதளவு குறைவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மாதத்தின் முதல் நாள் நற்செய்தி:மாதக் கடைசியான நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையான நிலையில், ஜூன் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (ஜூன் 1) ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 710 ஆகவும், சவரன் ரூ.53 ஆயிரத்து 680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை குறைவு:கடந்த சில நாட்களாகதங்கத்தின் விலையுடன் வெள்ளி விலையும் அதிகரித்து வந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வெள்ளி ஒரு கிராம் 100 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று வெள்ளி விலை ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ.98 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஜூன் 1):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,710
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.53,680
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,320
- 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.58,560
- 1 கிராம் வெள்ளி - ரூ.98
- 1 கிலோ வெள்ளி - ரூ.98,000
இதையும் படிங்க: ஆண்களைப் போல் பெண்களுக்கும் முகத்தில் முடி வளரும் பிரச்சினை: இதுதான் நிரந்தர தீர்வு.!