சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சற்று ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (செப்.26) சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை மாற்றமின்று 6 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் சவரன் 56 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் 60 ஆயிரத்து 120 ரூபாய் என விற்பனை ஆகிறது.
தங்க நகை பிரியர்களே உடனே கிளம்புங்க.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? - Today Gold and Silver Rate - TODAY GOLD AND SILVER RATE
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மாறாமல் நேற்றைய விலையில் ஒரு கிராம் முறையே ரூ.6,060 மற்றும் ரூ.101-க்கு விற்பனையாகிறது.
நகை கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Sep 26, 2024, 10:55 AM IST
அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதனால், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.