டெல்லி : ஹாங்காங் பங்குசந்தையை முதல் முறையாக பின்னுக்குத் தள்ளி சர்வதேச அளவில் நான்காவது பெரிய பங்குசந்தையாக இந்தியா வளர்ந்து உள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையின் மதிப்பு 4 புள்ளி 29 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ள நிலையில், தொடந்து முதலீடு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு 4 புள்ளீ 33 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ப்ளும்பெர்க் வெளியிட்ட தரவுகளின் படி, இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதிக்கு பின்னர் முதல் முறையாக 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது. தொடர் முதலீடு, வெளிநாடு முதலீட்டாளர்களின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகளவில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ள நிலையில், தற்போது அதிக பங்குகளை கொண்டு இந்தியா சர்வதேச அளவில் அதிக பங்கு மதிப்புகளை கொண்ட நான்காவது நாடாக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பங்கு சந்தை முதலீட்டாளர்களின் தொடர் முதலீடுகள் காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய பங்குசந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி 17 முதல் 18 சதவீதம் வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.