தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சரவை அல்லது சட்டமன்றம் நிறைவேற்றும் தீர்மானங்கள் மத்திய அரசை கட்டுப்படுத்தாதது ஏன்? - JAMMU KASHMIR STATEHOOD RESOLUTION

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒமர் அப்துல்லா அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்
ஒமர் அப்துல்லா அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் (Credits - aNI)

By Moazum Mohammad

Published : Oct 18, 2024, 11:07 PM IST

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2019 இல் லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு, ஜம்மு -காஷ்மீருக்கு அதுநாள்வரை சிறப்பு மாநில அந்தஸ்தை வழங்கிவந்த 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அப்போதிலிருந்து, ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. துணைநிலை ஆளுநர் அங்கு மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார்.

அதற்கு முன், மக்கள் ஜனநாயக கட்சி -பாஜக கூட்டணி ஆட்சி 2018 ஜூனில் கவிழ்ந்ததையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. தற்போது யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றதையடுத்து, அக்டோபர் 11 இல் ஜம்மு- காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஒமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று, இரண்டு நாட்களுக்கு பின் இன்று கூடிய முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை முதல்வர் ஒமர், பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சட்டரீதியாகப் பார்த்தால், யூனியன் பிரதேச அரசின் இந்த தீர்மானம் மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது. மாறாக அரசின் கொள்கையை பறைசாற்றும் ஒரு குறியீடாகவே இதுபோன்ற தீர்மானங்களை பார்க்க வேண்டியுள்ளது.

ஜ்ம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு மாநில அந்தஸ்து திரும்பப் பெறப்படும் என்பது தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பிரதான வாக்குறுதியாக இருந்தது. ஆனால், ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தால் நிர்வகிக்கப்படும் யூனியன் பிரதேசம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு குறைந்த அளவிலான அதிகாரத்தையே அளிக்கிறது. இந்த வரையறுக்கப்ப்டட எல்லைக்குள் வரும் அம்சங்களை மட்டுமே அமைச்சரவை தீர்மானம் கட்டுப்படுத்தும் என்கிறார் முந்தைய குடியரசுத் தலைவர் ஆட்சியில் அங்கம் வகித்த மூத்த சட்ட அதிகாரி ஒருவர்.

"ஒமர் அப்துல்லா தலைமையிலான அமைசச்ரவையின் இந்தத் தீர்மானம் மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது. அந்த தீர்மானத்தைப் பின்பற்றுவதா, வேண்டாமா என்பது மத்திய அரசின் விருப்பம். அதேசம.யம், அடையாள அரசியலையும், மத்திய அரசின் மேல் ஓர் அழுத்தத்தை உருவாக்குவதையும் இந்த தீர்மானம் நோக்கமாக கொண்டுள்ளது. இதில் இறுதி முடிவு எடுப்பது மத்திய அரசின் கையில் தான்உள்ளது" என்கிறார் அந்த அதிகாரி.

ஜம்மு -காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை கூறியுள்ளனர். மாநிில அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதற்கான கால வரையறை எதையும் நிர்ணயிக்கவில்லை.

இத்தகைய சூழலில் தான், மாநில சட்டமன்றத்தி்ன் அதிகாரங்களை குறைத்து, மத்திய அரசின் அதிகாரம் மேலோங்கும்படியான தற்போதைய ஆட்சி நிர்வாக முறைக்கு மாற்றாக, ஜ்ம்மு -காஷ்மீரூக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்பதை, தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.

ஆனால், சட்டமன்றத்தின் இத்தீர்மானம் மத்திய அரசை ஒருபோதும் கட்டு்ப்படுத்தாது என்கிறார் சட்ட வல்லுநரான ஜம்மு -காஷ்மீர் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர். "மாநில மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நிறைவேற்றும் இந்த தீர்மானத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்று கொண்டே ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை" என்கிறார் பெயர் கூற விரும்பாத அவர்.

ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு -காஷ்மீர் மாநில அரசு, சுயாட்சி அதிகாரம் வேண்டுமென கேட்டு, கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அத்தீர்மானத்தை அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் ஒர் வரலாற்று ஆவணமாகவும், எதிர்க்காலத்தில் குறிப்பிடுவதற்கான பேசுப்பொருளாகவும் திகழ்கிறது என்கிறார் அவர்.

இதேபோன்று, புதுச்சேரி மாநிலத்துக்கு முழு மாநில அந்தஸ்து கோரி, கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. 1972 ஆம் ஆண்டில் இப்படி மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்ற்ப்பட்டிருந்தாலும், இதனை செயல்படுத்தும் பொருட்டு, மத்திய அரசு நிபுணர் குழு எதையும் இதுநாள்வரை அமைக்கவில்லை என்று பிற யூனியன் பிரதேசங்களையும் மேற்கோள் காட்டுகிறார் அந்த முன்னாள் சபாநாயகர்.

"புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே இருந்து வருகிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக தரம்குறைக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதையே நாங்கள் மீண்டும் திரும்பத் தர கேட்கிறோம். மாறாக நாங்கள் புதிதாக எதையும் கேட்கவில்லை" என்கிறார் புதிய அரசின் எம்எல்ஏ ஒருவர்.

"இந்த தீர்மானம் சட்டப்பூர்வமாக எடுப்படாது என்பதை நாங்களும் ஏற்கிறோம். ஆனால், 2019 ஆகஸ்டுக்கு முந்தைய எங்களின் நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு மீது அழுத்தத்தை உருவாக்கும்" என்று மேலும் கூறுகிறார் அவர்.

ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு மாநில அந்தஸ்தை கோரும் இத்தீ்ர்மானத்தில் வீரியம் குறைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் பலவாறு விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், புதிய அரசின் இடைக்கால சபாநாயகராக முபராக் குல் வரும் 21 இல் (அக்டோபர் 21) பொறுப்பேற்க உள்ளார். நாம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளதால் இ்த்தீர்மானம் குறித்து எதிர்க்கட்சிகள் பொறுமைகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒருவர்.

ABOUT THE AUTHOR

...view details