வாரணாசி:18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன.
மதியம் 5 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. கடும் பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் 3வது முறையாக வாரணாசி போட்டியிட்டார் பிரதமர் மோடி, அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய் ராய், மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக அதர் ஜமால் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த முறை வெற்றி பெற்றது போலவே இந்த முறையும் மோடி எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே போல் தபால் வாக்கில் மோடி முன்னிலை பெற்றார். ஆனால் அடுத்த சுற்றில் பின்னடைவை சந்தித்தார். முதல் மூன்று சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து இருந்த மோடி, அடுத்தடுத்த சுற்றுகளில் ஏறு முகம் கண்டார்.