தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உபி பட்டாசு ஆலை வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு! - உபி பட்டாசு ஆலை வெடி விபத்து

UP firecracker factory blast: உத்தர பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Feb 25, 2024, 6:31 PM IST

Updated : Mar 7, 2024, 1:47 PM IST

கவுசம்பி : உத்தர பிரதேசம் மாநிலம் கவுசம்பி மாவட்டம் மஹதேவ கிராமத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையை ஷாகித் (வயது 35) என்பவர் நடத்தி வந்து உள்ளார். இந்நிலையில், இன்று (பிப்.25) மதியம் 12 மணி நேரத்தில் ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் சத்தம் அருகில் சில கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக கூறப்பட்டு உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் போலீசார், விபத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 7 பேரின் சடலங்கள் ஆலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த கோர விபத்தில் ஆலையின் உரிமையாளர் ஷாகித்தும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மற்றவர்கள் ஷிவ் நாராயண், சிவ்காந்த், அசோக் குமார் மற்றும் ஜெய் சந்திரா என்றும் இரண்டு பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பட்டாசு ஆலை உள்ளூர் நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று பாதுகாப்பு நடைமுறைகளை சரிவர பின்பற்றியே செயல்பட்டு வந்ததாகவும், ஆலைக்கு தேவையாக வைத்து இருந்த ரசாயணங்களில் பற்றி தீ ஆலை முழுவதும் பரவியே இந்த கோர சம்பவத்திற்கான காரணம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

வெடி விபத்து சம்பவத்தின் போது ஆலையில் மொத்தம் 18 பேர் வரை பணியில் இருந்து நிலையில், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், வெடி விபத்தின் தாக்கம் தாங்க முடியாமல் சில தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அண்மையில் டிராக்டர் டிராலி கவிழ்ந்து குளத்தில் விழுந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அதற்குள் மீண்டும் ஒரு கோர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்து உள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :கேரள பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! ஆயிரக்கணக்கான பெண்கள் சாமி தரிசனம்!

Last Updated : Mar 7, 2024, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details