காக்த்விப் :மேற்கு வங்கம் மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் அடுத்த காக்த்வீப் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாகூர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அயோத்தி ராமர் கோயில் கோலாகலாமாக திறக்கப்பட்டது, அடுத்த 7 நாட்களில் இந்திய குடியுரிமைச் சட்டம் (சிஏஏ) நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.
விரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தன்னால் உறுதியாக சொல்ல முடியும் என்றும் மேற்கு வங்கம் உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதை அனைவரும் விரைவில் காண்பர் என்று கூறினார். வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை இருந்தால் குடிமகன் என்றும் அவர்கள் வாக்களிக்கலாம் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் கூறி உள்ளதாகவும், ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தான் கேள்விப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்றும், குறிப்பாக மட்டுவா சமூக மற்றும் பாஜக ஆதரவாளர்களுக்கு மட்டுமே வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். பாஸ்போர்ட் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, மற்ற பிற ஆவணங்களை கொண்டு மேற்கொள்ளப்படுவதாகவும்,