குவஹாத்தி:நாட்டின் 78வது சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் முயற்சியில், அசாமில் தடை செய்யப்பட்ட உல்ஃபா தீவிரவாத அமைப்பு 19 இடங்களில் வெடிகுண்டுகளை வைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
உல்ஃபா இயக்கம் இன்று காலை 11.30 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில், “அசாமின் திப்ருகர், சிவசாகர், டின்சுகியா, நாகோன், லக்கிம்பூர், நல்பாரி, ரங்கியா மற்றும் கோல்காட் உள்ளிட்ட 19 இடங்களில் வெடிகுண்டுகளை புதைத்துள்ளோம். அவைகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்திருந்தோம்.
கடைசி நேரத்தில் நடந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவைகள் வெடிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், வெடிகுண்டுகளை எங்கெங்கு புதைக்கப்பட்டுள்ளது என்ற புகைப்படங்களையும் சேர்த்து உடனடியாக அவைகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்துமாறும் உல்ஃபா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அசாமில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள், உல்ஃபா அறிக்கையில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. இருப்பினும். வெடிகுண்டு இருப்பதாகச் சொல்லப்படும் பகுதிகளில் தேடும் பணிகளில் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; நடிகைகள் சமந்தா, ஆலியா பட் கடும் கண்டனம்!